யோகநாதன்.செ.

பெயர்: செ. யோகநாதன்

பிறப்பிடம்: கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • யோகநாதன் கதைகள் - 1964
  • வீழ்வேன் என்று நினைத்தாயோ? – 1990
  • அன்னை வீடு – 1995
  • கண்ணில் தெரிகின்ற வானம் - 1996
  • அசோகவனம் - 1998
  • கண்ணீர் விட்டே வளர்த்தோம்

குறுநாவல்கள்:

  • ஓளி நமக்கு வேண்டும் - ஐந்து குறுநாவல்கள் - 1973
  • காவியத்தின் மறுபக்கம் - மூன்று குறுநாவல்கள் - 1977
  • சுந்தரியின் முகங்கள்
  • சிறுபொறி பெருந்தீ
  • காற்றும் சுழிமாறும்
  • அகதியின் முகம்

நாவல்கள்:

  • அரசு
  • இரவல் தாய்நாடு

விருதுகள்:

  • ஒளி நமக்கு வேண்டும் - இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - 1974
  • இரண்டு தடவைகள் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றவர்.
  • இளம் எழுத்தாளர் சங்கம் - சிறுகதைப் போட்டி – தங்கப்பதக்கம்
  • பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் சிறுகதைப் போட்டி- தங்கப்பதக்கம்
  • காவியத்தின் மறுபக்கம் - சிரித்திரன் குறுநாவல் போட்டி – முதல்பரிசு
  • சுந்தரியின் முகங்கள் குறுநாவல் - தமிழக அரசின் பரிசு

இவர் பற்றி:

  • ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் 2009 இல் காலமானார். இவர் பாலுமகேந்திரா, லெனின் ஆகியோருடன் இணைந்து திரைப்படத்துறையிலும் கால்பதித்துள்ளார். கண்ணாடி வீட்டில் இருந்து ஒருவன் என்ற மலையாளப் படத்திற்கு இவர் வசனம் எழுதியுள்ளார். இவர் மொத்தம் 87 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். சிறுவர் இலக்கியதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கியவர். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடுகொண்டு தன்னை இணை இயக்குனராகவும் ஈடுபடுத்திக்கொண்டவர். இவர் தனது 66 ஆவது வயதில் 28.01.2008 அன்று மாரடைப்பால் காலமானார். இவர் இதுவரை 74 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.